eng
competition

Text Practice Mode

Tamil Typing மனிதர்களின் பரிணாம வளர்ச்சி

created May 17th 2022, 13:36 by KALAISELVAN


0


Rating

118 words
0 completed
00:00
ஆறாம் வகுப்பு பயிலும் மாணவியான தமிழினியும் அவளுடைய பாட்டியும் ஓர் அறிவியல் மையத்திற்குச் சென்றார்கள். அங்கே அவர்கள் ஒரு கால இயந்திரத்தைக் கண்டார்கள். அதை இயக்குபவர், இயந்திரம் செயல்படும் முறையை அவர்களுக்கு விளக்கினார்.
 
இயக்குபவர்  :
 இந்த இயந்திரம் மூலம் நீங்கள் விரும்பும் காலததிற்கு பயணம் செய்யமுடியும். இதிலுள்ள ஒவ்வொரு பொத்தானும் ஒரு குறிப்பிட்ட கால கட்டத்துக்கு உரியது. ஏதேனும் ஒன்றை நீங்கள் அழுத்தினால் போதும் அதற்குறிய காலத்தைச் சேர்ந்த காட்சிகளைக் கண்டு மகிழலாம். காலப்பணயத்திற்கு நீங்கள் தாயாரா?
 
இதைக் கேட்ட தமிழினியும் அவள் பாட்டியும் உற்சாகமடைந்தார்கள் காலப்பயணம் மேற்கொள்ள முடிவெடுத்தார்கள்.  
தமிழினி  
    பாட்டி, நாம் முன்னோக்கிப் போகலாம்? கி.பி (பொ.ஆ) 2200 எப்படி இருக்கும் என்று பார்ப்போமா?
பாட்டி  
    2200ஆம் ஆண்டைப் பார்ப்பதில் ஆர்வத்தைத் தூண்டும்படி  ஏதும் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. நாம் பின்னோக்கிச் சென்று, கடந்த காலம் எப்படி இருந்ததது என்று பார்த்தால் என்ன?
தமிழினி
நீங்கள் சொல்வது சரிதான் பாட்டி அப்படியே செய்யலாம்.  
பாட்டி கி.பி (பொ.ஆ) 1950க்குச் செல்வதற்கான பொத்தானை அழுத்தினார். உடனே அவர்கள் முன் இருந்த காட்சி மாறியது.  

saving score / loading statistics ...